/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏப்.5ல் மின் நுகர்வோர் சிறப்பு குறை தீர் கூட்டம்
/
ஏப்.5ல் மின் நுகர்வோர் சிறப்பு குறை தீர் கூட்டம்
ADDED : ஏப் 03, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, பெரியகுளம், சின்னமனுார் செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்.5ல் காலை 11:00 முதல் சிறப்பு குறைதீர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இதில் மின் கட்டண பிரச்னைகள், குறைந்த மின்னழுத்த புகார்கள் தீர்வு காணலாம். இதில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். குறைந்த மின்னழுத்த புகார்களுக்கு தீர்வுகளை ஒரு மாதத்திற்குள்ளும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

