/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட தடகள போட்டியில் புனித ஆக்னஸ் பள்ளி சாம்பியன்
/
மாவட்ட தடகள போட்டியில் புனித ஆக்னஸ் பள்ளி சாம்பியன்
மாவட்ட தடகள போட்டியில் புனித ஆக்னஸ் பள்ளி சாம்பியன்
மாவட்ட தடகள போட்டியில் புனித ஆக்னஸ் பள்ளி சாம்பியன்
ADDED : அக் 26, 2024 07:13 AM

கம்பம்: தேனி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மாவட்ட தடகள போட்டிகள் ராயப்பன்பட்டி எஸ்.யூ. எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த - போட்டிகளில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100 மீ., 200மீ., 400 மீ., ஓட்டம், மற்றும் 600 மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 400 மீட்டர் தொடரோட்டம் என 14 வயதுக்குட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றது. 17 வயதுக்குட்பட்ட பிரிவில் தீபிகா மற்றும் கன்னிஸ்டி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர். கோலூன்றி தாவுதல் , 1500 மற்றும் 3 ஆயிரம் மீட்டர் தத்தி எட்டு வைத்து தாவுதல் போன்ற போட்டிகளிலும் வெற்றி பெற்று 131 புள்ளிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
இவர்கள் ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
சாதனை மாணவிகளை பள்ளியின் தாளளரும் தலைமையாசிரியையுமான மரிய நிர்மலா பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.