/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி துவக்கம்
/
மாநில பூப்பந்தாட்ட போட்டி துவக்கம்
ADDED : பிப் 08, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
இப்போட்டியை பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயலாளர் இனாயத் உசேன்கான், பள்ளி ஆட்சி குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நேற்று முன்தினம் நடந்த மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 35 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.