UPDATED : அக் 31, 2026 08:08 PM
ADDED : அக் 31, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
தேனி, நவ., 1தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சர்வதேச பக்கவாத தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரோகிணிதேவி தலைமை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் சிவகுமரன் முன்னிலை வகித்தார். பக்கவாதம் ஏற்பட காரணம், அறிகுறி, ஏற்பட்டதும் உடலில் நிகழும் மாற்றங்கள், அறிகுறிகள் ஏற்பட்டதும் மருத்துவனைக்கு அழைத்து வந்தால் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்ற முடியும் உள்ளிட்டவை பற்றி மருத்துவ மாணவர்கள் நாடகம் மூலம் விளக்கினர். நிகழ்ச்சியில் பொது மருத்துவத்துறை தலைவர் திருநாவுக்கரசு, அவசர சிகிச்சைத்துறை தலைவர் பாலசுப்பிரமணி, நரம்பியல் இணை பேராசிரியர்கள் சங்கர் கணேஷ், மதுரை மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் கணேசபாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
