/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்டிரைக்கால் சேலைகள் உற்பத்தி பாதிப்பு வெளியூர்களில் வாங்கி வியாபாரம்
/
ஸ்டிரைக்கால் சேலைகள் உற்பத்தி பாதிப்பு வெளியூர்களில் வாங்கி வியாபாரம்
ஸ்டிரைக்கால் சேலைகள் உற்பத்தி பாதிப்பு வெளியூர்களில் வாங்கி வியாபாரம்
ஸ்டிரைக்கால் சேலைகள் உற்பத்தி பாதிப்பு வெளியூர்களில் வாங்கி வியாபாரம்
ADDED : ஜன 05, 2025 06:23 AM
ஆண்டிபட்டி : விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னையில் வேலை நிறுத்தத்தால் டி.சுப்புலாபுரத்தில் தினமும் 6000 க்கும் அதிகமான சேலைகள் உற்பத்தி பாதித்துள்ளது. சேலை விற்பனையை ஈடு செய்ய, வெளியூர்களில் உற்பத்தியாகும் சேலைகளை வாங்கி வியாபாரத்தை ஈடுசெய்கின்றனர்.
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி ஆகிறது. உற்பத்தியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்களுக்கான இரு ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு நிர்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜனவரி 1 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டி.சுப்புலாபுரத்தில் தினமும் 6000க்கும் அதிகமான சேலைகள் உற்பத்தி பாதித்துள்ளது. தற்போது தைப்பொங்கல் சீசன் என்பதால் காட்டன் ரக சேலைகளுக்கு தேவை அதிகம் உள்ளது. வியாபாரத்தை ஈடு செய்வதற்காக உற்பத்தியாளர்கள் ராஜபாளையம், சங்கரன்கோயில், அருப்புக்கோட்டை பகுதிகளில் உற்பத்தியாகும் சேலைகளை வாங்கி வந்து வியாபாரத்தை தொடர்கின்றனர். கூலி உயர்வு பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறி வாழ்வாதாரம் பாதித்துள்ள தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.