/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் கடத்தல் நாடகம் நடத்திய மாணவர்
/
பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் கடத்தல் நாடகம் நடத்திய மாணவர்
பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் கடத்தல் நாடகம் நடத்திய மாணவர்
பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் கடத்தல் நாடகம் நடத்திய மாணவர்
ADDED : ஆக 12, 2025 05:33 AM
மூணாறு : மூணாறு அருகே உள்ள எஸ்டேட்டைச் சேர்ந்த மாணவர் சின்னக்கானல் பகுதி விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
வார விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மகன் பள்ளிச் செல்வதாக நினைத்து பெற்றோர்களும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதியம் 12:00 மணி அளவில் சம்பந்தபட்ட மாணவர் அலைபேசியில் தந்தையை தொடர்பு கொண்டு கூறியதாவது: மூணாறில் இருந்து தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று அடிமாலியில் வைத்து தாக்கியதுடன் தன்னிடம் இருந்த ரூ.100ஐ பறித்துக் கொண்டனர். பின்னர் வழியில் இறக்கி விட்டு சென்றனர். அடிமாலி நகருக்கு வந்து லாட்டரி கடைகாரர் ஒருவரிடம் நடந்தவற்றை கூறி அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்டதாக மாணவர் கூறினார். பதறிப் போன தந்தை சிலரின் உதவியுடன் மூணாறு போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் மாணவர் வேறு எங்கும் சென்று விடக்கூடாது என எண்ணி அடிமாலி உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு தந்தையுடன் அடிமாலி சென்ற போலீசார் சம்பந்தபட்ட லாட்டரி கடையில் இருந்து மாணவரை மீட்டு மூணாறுக்கு அழைத்து வந்தனர்.
அதன்பிறகு நகரில் மாணவரை கடத்தியதாக கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளிக்கு சென்று தங்கி படிக்க விருப்பம் இன்றி மாணவர் கடத்தல் நாடகமாடியதாக அம்பலமானது.