sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துவக்க பள்ளியில் 20 ஆண்டாக செயல்படும் உயர்நிலைப்பள்ளி அரசு நிலம் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி

/

துவக்க பள்ளியில் 20 ஆண்டாக செயல்படும் உயர்நிலைப்பள்ளி அரசு நிலம் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி

துவக்க பள்ளியில் 20 ஆண்டாக செயல்படும் உயர்நிலைப்பள்ளி அரசு நிலம் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி

துவக்க பள்ளியில் 20 ஆண்டாக செயல்படும் உயர்நிலைப்பள்ளி அரசு நிலம் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி


ADDED : அக் 20, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 20, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தில் 20 ஆண்டுகளாக நெருக்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளியும் செயல்படுவதால் மாணவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி டி.கள்ளிப்பட்டியில் 1928ல் துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி

நூற்றாண்டை நோக்கி 96 ம் ஆண்டுகளாக செயல்படுகிறது. இப் பள்ளியில் 2004ல் ஆரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வேறு இடம் தேர்வு செய்து கட்டடம் கட்டி முடியும் வரை தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் செயல்படுத்த கல்வித்துறையினர் அறிவுருத்தினர். அதன்படி கள்ளிப்பட்டி- கைலாசபட்டி ரோட்டில் 50 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் கண்டறிந்து வருவாய் துறையினர் இடம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த இடத்தின் 50 சதவீத இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால் இடம் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு மீட்க முடியாமல் பள்ளிக்கான இடத்தேர்வை வருவாய் துறை கைவிட்டது. கள்ளிப்பட்டியில் உள்ள துவக்க பள்ளி வளாகத்திலேயே 20 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளி செயல்படுவதால் இரு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள 7 கட்டடங்களில் 2 கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது.

குறையுது மாணவர் சேர்க்கை


பள்ளியில் போதிய இடைவெளி இன்றி வகுப்பறைகள் செயல்படுவதால் மாணவர்கள் இடநெருக்கடியில் அமர்ந்துள்ளதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குறுகிய இடத்தில் அதிக மாணவர்கள் உள்ளதால் வகுப்பறைக்கான சூழல் இல்லதா நிலை உள்ளது. இட நெருக்கடியை கருதி பெற்றோர்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

துவக்கப் பள்ளியில் 2022ல் 176 மாணவர்களும், 2023ல் 143 மாணவர்களும், தற்போது 121 மாணவர்கள் உளளனர். இதே போல் உயர்நிலைப் பள்ளியில் துவக்கத்தில் 450 மாணவர்களும், 2022ல் 220 மாணவர்களும், 2023ல் 196 மாணவர்களும், தற்போது 179 மாணவர்களாக உள்ளனர். இடவசதி இல்லாததால் ஆண்டுக்காண்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் இங்கு படிக்கும் இரு கிராம மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் குமுறலை வெளிப்படுத்தினர்.

இடம் நெருக்கடி நிலைமை குறித்து துவக்க பள்ளி தலைமையாசிரியை கீதா, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சண்முகக்கனி ஆகியோர் மாவட்ட கல்வித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். எப்போது பிரச்னை தீருமோ என காத்திருக்கின்றனர்.

உயர்நிலைப்பள்ளியை மாற்ற வேண்டும்


ராஜேஸ்வரி,பெற்றோர் டி.கள்ளிப்பட்டி: எனது மகன் இங்கு 10ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து மழை பெய்தால் மழைநீர் மேற்கூரை வழியாக இறங்கி வகுப்பறையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் மழை வந்தால் பாதுகாப்பு கருதி பள்ளி விடுமுறை விடப்படுகிறது. பள்ளி வளாகம் நெருக்கடி காரணமாக சந்தை கடை போல் மாறியுள்ளது. படிப்பில் கவன சிதறல்கள் ஏற்படுகிறது. உயர்நிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கழிப்பறை வசதியின்றி அவதி:


பாண்டி, டி.கள்ளிப்பட்டி: அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள், மாணவிகளுக்கு போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் ஆய்வகத்தில் உட்கார்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனால் ஆய்வகத்தில் போதுமான உபகரணங்கள் இல்லாமல் செய்முறை பயிற்சியில் முன்னேற்றம் இல்லை. பள்ளியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு கூட இடம் இல்லை. இதனால் சாப்பிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு உயர்நிலை பள்ளி அமைக்க தற்போது 2 ஏக்கர் நிலம் தேவை உள்ளது. அரசு புறம்போக்கு நிலம் வேறு இடத்தில் உள்ளதா என்பதை அறிந்து நிலம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம் இல்லாததால் திருப்பி சென்ற நிதி


ராஜேந்திரன், டி.கள்ளிப்பட்டி: 20 ஆண்டுகளாக நெருக்கடியில் செயல்படும் உயர்நிலைப் பள்ளி, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தால் தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து இருக்கும். கட்டுமானப்பணிக்கு நபார்டு ஒதுக்கிய நிதி, இடம் தேர்வு செய்யப்படாததால் டி.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நிதி சென்றது.

தீர்வு இடம் தேர்வைதீவிரப்படுத்துங்கள்


உயர்நிலைப்பள்ளிக்கு வருவாய்த்துறை ஒதுக்கிய இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை போலீஸ் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அரசு புறம்போக்கு இடம் வேறு இடத்தில் உள்ளதா என ஆய்வு செய்து புதிய இடம் தேர்வு செய்ய வருவாய் துறையும்,கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலம் ஒப்படைத்தால் நுாற்றுக்கணக்கான மாணவர்களின் உயர்நிலை, மேல்நிலை கல்வி வசப்படும்.






      Dinamalar
      Follow us