/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயந்திர நடவு தொழில் நுட்பம் மாணவிகள் விளக்கம்
/
இயந்திர நடவு தொழில் நுட்பம் மாணவிகள் விளக்கம்
ADDED : ஜூலை 24, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலை, வேளாண்மை படிக்கும் இறுதியாண்டு மாணவிகள் தர்ஷினி, கிருத்திகா, மதுமிதா, அன்னபூர்ணா, மாபிள்ளை, சிவப்ரியா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை விளக்கி கூறி வருகின்றனர்.
அனுமந்தன்பட்டியில் விவசாயிகளுக்கு இயந்திர நடவின் பயன்கள், தொழிலாளர் தேவை குறைவு, அதிக மகசூல், நோய் தாக்குதல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பயன்களை விளக்கியும், இயந்திர நடவு தொழில் நுட்பங்களையும் விளக்கினார்கள்.
இதற்கான வழிகாட்டுதல்களை உத்தமபாளையம் வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன் செய்திருந்தார்.