/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் பள்ளியில் முற்றுகை
/
ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் பள்ளியில் முற்றுகை
ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் பள்ளியில் முற்றுகை
ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் பள்ளியில் முற்றுகை
ADDED : ஜூலை 29, 2025 01:05 AM

போடி: போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் பணி மாறுதலில் செல்வதை கண்டித்து ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க கோரி மாணவர்கள், பெற்றோர்கள் நேற்று பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திம்மிநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 69 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் அரவிந்த் 15 ஆண்டுகளாக இப் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இவர் மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் பாடம் நடத்தி அவர்களின் அன்பை பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்த பணி மாறுதல் கலந்தாய்வில் மயிலாடும்பாறை,காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அரவிந்த் பணி மாறுதல் பெற்றுள்ளார். நேற்று திம்மிநாயக்கன்பட்டி பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆசிரியர் அரவிந்த் மீண்டும் இப்பள்ளிக்கு வர வேண்டும் என கூறி வகுப்புகளை புறக்கணித்தனர்.
இவருக்கு ஆதரவாக பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் நாகலட்சுமி, உதவி கல்வி அலுவலர் சம்பூர்ண பிரியா ஆசிரியர் அரவிந்த்யை பள்ளிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர் ராமகிருஷ்ணனால்,' எனக்கு சக ஆசிரியர் ஒருவரால் மன உளைச்சல் ஏற்பட்டது.
இதனால் நான் கவுன்சிலிங் மூலம் காமராஜபுரம் பள்ளிக்கு மாறுதல் உத்தரவு பெற்றேன். மாணவர்கள் நலன் கருதியும் மீண்டும் இதே பள்ளியில் பணியாற்ற வாய்ப்பு வழங்க கல்வி அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தார்.
அதன் பின் அதிகாரிகள் மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர் ராமகிருஷ்ணன் மாணவர் களுக்கு சரிவர பாடம் நடத்துவது இல்லை எனவும், பணி மாறுதலில் செல்லும் ஆசிரியர் அரவிந்த் யை மீண்டும் இதே பள்ளியில் பணி உத்தரவு வழங்க கோரினர்.
மாறுதல் வழங்காவிட்டால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.
ஆசிரியர் அரவிந்த்யை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தவும், ஆசிரியர் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என கூறியதன் பதில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். மதியத்திற்கு பின்பு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.