/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐந்து ஏக்கர் போலி பட்டா ரத்து சப் கலெக்டர் நடவடிக்கை
/
ஐந்து ஏக்கர் போலி பட்டா ரத்து சப் கலெக்டர் நடவடிக்கை
ஐந்து ஏக்கர் போலி பட்டா ரத்து சப் கலெக்டர் நடவடிக்கை
ஐந்து ஏக்கர் போலி பட்டா ரத்து சப் கலெக்டர் நடவடிக்கை
ADDED : ஆக 09, 2025 04:00 AM
மூணாறு: மூணாறு அருகே சொக்கர்முடியில் ஐந்து ஏக்கர் நிலத்திற்கான போலி பட்டாவை தேவிகுளம் சப் கலெக்டர் ரத்து செய்தார்.
மூணாறு அருகே அதிதீவிர பேரிடர் பகுதி பட்டியலில் உட்படுத்தப்பட்ட சொக்கர்முடி மலையில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, விதி மீறி கட்டுமானங்கள் நடப்பதாக தெரியவந்தது.
இது குறித்து தேவிகுளம் முன்னாள் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமைலான குழு விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையின்படி வருவாய்துறை அதிகாரிகள் நான்கு பேர் கடந்த செப்டம்பரில் ' சஸ்பெண்ட் ' செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சொக்கர்முடி மலையில் பட்டா உள்பட ஆவணங்கள் வைத்துள்ள 44 பேருக்கு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யுமாறு தேவிகுளம் சப் கலெக்டர் செப்.28ல் நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த ஆய்வில் சொக்கர் முடிமலைக்கு உட்பட்ட கேப் ரோடு அருகே செம்மண்ணார் ரோட்டில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தின் ஆவணங்கள் அனைத்தும் போலி எனவும் அந்த நிலம் தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.
தவிர சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித அனுமதியும் இன்றி தங்கும் விடுதி கட்டப்பட்டதாகவும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதனால் சம்பந்தப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தின் போலி பட்டாவை ரத்து செய்து தேவிகுளம் சப் கலெக்டர் உத்தரவிட்டார்.