தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/குறுந்தானியம் சாகுபடிக்கு பின்னேற்பு மானியம்

குறுந்தானியம் சாகுபடிக்கு பின்னேற்பு மானியம்

குறுந்தானியம் சாகுபடிக்கு பின்னேற்பு மானியம்


UPDATED : நவ 21, 2026 06:54 PM

ADDED : நவ 21, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:54 PM ADDED : நவ 21, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி வட்டாரத்தில் குறுந்தானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என போடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது : போடி வட்டாரத்தில் மாறிவரும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப குறுந்தானிய பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட தமிழ்நாடு குறுந்தானிய இயக்க திட்டம் செயல்படுத்தப்படகிறது. இத் திட்டத்தின் கீழ் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். உழவு, களை எடுத்தல், தெளிப்புப் பணி, பறவை விரட்டுதல் உள்ளிட்ட செயல் பாடுகளுக்கு ஒரு எக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார், சிட்டா நகலை போடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்து உரிய பின்னேற்பு மானியத்தை பெற்று பயன் பெறலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us