/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க மானியம்
/
வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க மானியம்
ADDED : ஜூன் 19, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 100 டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்பு கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 5டன் சேமிக்கும் வசதி செய்ய சுமார் ரூ. ஒரு லட்சம் செலவாகும்.இதில் 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்த பட்சம் அரை ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
சிட்டா, ஆதார் நகல், ரேஷன்கார்டு, நில வரைபட நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம், தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்தார்.