/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செங்கரும்பு சாகுபடிக்கு மானிய திட்டங்கள் தேவை
/
செங்கரும்பு சாகுபடிக்கு மானிய திட்டங்கள் தேவை
ADDED : ஆக 12, 2025 06:48 AM
சின்னமனுார் : ''சின்னமனுார் வட்டாரத்தில் செங்கரும்பு சாகுபடிக்கு மானிய திட்டங்களை அறிமுகம் செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, கரும்பு சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி சின்னமனுார், பெரியகுளம் வட்டாரங்களில் மட்டுமே அதிகளவில் சாகுபடியாகிறது. போடி, கம்பம், தேவதானப் பட்டி பகுதிகளில் கணிசமாக உள்ளது.
செங்கரும்பு சித்திரையில் நடவு செய்து, தை மாதத்தில் அறுவடை செய்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு அரசு விலையில்லா கரும்பு வழங்குகிறது.
தேனி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் சின்னமனுார், பெரியகுளம் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டது.
வேளாண் பயிர்களுக்கு உள்ளது போல கரும்பிற்கு என, மானிய திட்டங்கள் ஏதும் இல்லை. இதனால் நாளுக்கு நாள் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
செங்கரும்பு சாகுபடிக்கு விதை கரும்பு, உரம், பூச்சி மருந்துகள், நுண்ணுாட்ட உரங்கள் மானிய விலையில் வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.