/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை தமிழக, கேரள எல்லையில் தடுத்து நிறுத்தி சோதனை

ADDED : நவ 13, 2024 11:52 PM
கம்பம்; ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய் பரிசோதனைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காச நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் முழுவதுமாக அகற்றுதல் என்ற இலக்கை நோக்கி சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள என். சி. டி. பிரிவுகள் அனைவரையும் பரிசோதித்து வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளா ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்களை பரிசோதிப்பது சவாலாக இருந்தது.
நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் அதிகாலையில் வேலைக்கு சென்று மாலையில் திரும்புவார்கள் . எனவே அவர்களை பரிசோதிப்பது சவாலான பணியாக இருந்தது.
எனவே போடி மெட்டு, கம்பமெட்டு, குமுளி ஆகிய எல்லையோரங்களில் நேற்று காலை ஒரே சமயத்தில் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.
தமிழக பகுதியில் இருந்து கேரள ஏலத்தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்களை ஜீப்பை விட்டு இறக்கி, பரிசோதனைகள் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டனர் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.