நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை தாருகா முத்துச்சாமி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 55.
இவரது மனைவி ஜெயலட்சுமி 51. இவர்களுக்கு ராகவன், இனியவன் இரு மகன்களும், மகள் உள்ளார். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளார். நான்கு மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் ராகவன் இறந்தார். இளையமகன் இனியவன் 33. மது போதைக்கு அடிமையானார். இதனால் உடல் நலம் பாதித்து அவதிப்பட்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.