/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் இருந்து 4வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
/
பெரியாறு அணையில் இருந்து 4வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
பெரியாறு அணையில் இருந்து 4வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
பெரியாறு அணையில் இருந்து 4வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 22, 2025 07:53 PM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ரூல்கர்வ் விதிமுறையால் 4வது நாளாக கேரளாவிற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த அணை நீர்ப் பிடிப்பில் 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அக்.18ல் தேக்கடியில் 158.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம்ஆறடி உயர்ந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 13.6 மி.மீ., தேக்கடியில் 5.8 மி.மீ., மழை பதிவானது. தமிழகப் பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது .அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 754 கன அடியாகும். நீர் இருப்பு 6748 மில்லியன் கன அடி.
அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும், ரூல்கர்வ் (நீர்மட்ட கால அட்டவணை) விதிமுறைப்படி தற்போது 137.75 அடி மட்டுமே தேக்க முடியும். நீர்ப்பிடிப்பில் கனமழை பெய்து திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்.18ல் நீர்மட்டம் 137.80 அடியாக இருந்த நிலையில் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள பகுதிக்கு 1078 கன அடி வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால் வெளியேற்றம் 7163 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அக். 19ல் 10 ஆயிரத்து 178 கன அடியும், 20ல் 7567 கன அடியும் வெளியேற்றப்பட்டது.
நேற்று 4வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்த நிலையில் கேரள பகுதிக்கு 6003 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முழுவதும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.