ADDED : பிப் 21, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தனர்.
இம்மருந்தகம் தேனி சமதர்மபுரம், பழனிசெட்டிபட்டி, போடி, அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத் பீடன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.