/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வேயர்கள் வேலை நிறுத்தம் முடங்கிய நில அளவீட்டுப் பணி
/
சர்வேயர்கள் வேலை நிறுத்தம் முடங்கிய நில அளவீட்டுப் பணி
சர்வேயர்கள் வேலை நிறுத்தம் முடங்கிய நில அளவீட்டுப் பணி
சர்வேயர்கள் வேலை நிறுத்தம் முடங்கிய நில அளவீட்டுப் பணி
ADDED : நவ 22, 2025 03:52 AM

தேனி: மாவட்ட நில அளவைத்துறையில் சர்வேயர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நில அளவீட்டுப் பணிகள், பட்டா வழங்குதல், நில அளவீட்டுப்பணிகள் கடந்த ஐந்து நாட்களாக முடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
நில அளவைத்துறையில் நில அளவையர்கள், நில அளவையர் (பராமரிப்பு), சார் ஆய்வாளர்கள், வட்டத்துணை ஆய்வாளர்கள் என 66 பேர் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நவ.18ல் துவங்கியது.
நேற்று தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் துவங்கியது. மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதிராஜா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தாஜூதீன், துணைத் தலைவர் ரவிக்குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கறுப்பனராஜா ஆகியோர் பேசினர்.
காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து நாட்களாக தனிப்பட்டா கோரி விண்ணப்பித்தவர்கள், ஆக்கிரமிப்பு அகற்ற தயாரான உள்ளாட்சி அமைப்புகள், நிலப்பதிவு செய்தவர்கள், அத்துமால் அளவீடு செய்துதரக்கோரி விண்ணப்பித்த விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தவிப்பில் உள்ளனர்.

