/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகள் மரணத்தில் மருமகன் மீது சந்தேகம்: தாயார் புகார்
/
மகள் மரணத்தில் மருமகன் மீது சந்தேகம்: தாயார் புகார்
மகள் மரணத்தில் மருமகன் மீது சந்தேகம்: தாயார் புகார்
மகள் மரணத்தில் மருமகன் மீது சந்தேகம்: தாயார் புகார்
ADDED : ஜூன் 20, 2025 03:47 AM
கம்பம்:' மகள் பாண்டி செல்வி மரணத்தில், மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக,' தாயார் சரோஜா புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையை சேர்ந்த சரோஜா, இவரது மகள் பாண்டிசெல்வி 30, நாகராஜ் 35, என்பவரும் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் தோட்டங்களில் தங்கி காவல் பணி செய்துள்ளனர்.
கம்பம் மாலையம்மாள்புரத்தில் தனியார் தோட்டத்தில் வேலைக்கு இருந்துள்ளனர். ஜூன் 14 ம் தேதி தனது மாமியார் சரோஜாவிற்கு, நாகராஜ் போன் செய்து, 'தனது மனைவிக்கு மஞ்சள் காமாலை நோய் என்றும், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும்,' தகவல் கூறியுள்ளார். சரோஜா தனது மகளை பார்க்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருமகன் நாகராஜ் இல்லை. சிகிச்சையில் இருந்த மகள் பாண்டிச்செல்வி கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. சிகிச்சையில் இருந்த பாண்டி செல்வி, நேற்று முன்தினம் இறந்தார். தனது மகளின் சாவில் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக கம்பம் வடக்கு போலீசில் சரோஜா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.