/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கலூத்துமெட்டு ரோடு பணி மீண்டும் துவங்க்க வலியுறுத்தல்; தமிழக, கேரளா விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்
/
சாக்கலூத்துமெட்டு ரோடு பணி மீண்டும் துவங்க்க வலியுறுத்தல்; தமிழக, கேரளா விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்
சாக்கலூத்துமெட்டு ரோடு பணி மீண்டும் துவங்க்க வலியுறுத்தல்; தமிழக, கேரளா விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்
சாக்கலூத்துமெட்டு ரோடு பணி மீண்டும் துவங்க்க வலியுறுத்தல்; தமிழக, கேரளா விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஏப் 20, 2025 04:52 AM

தேவாரம்: கேரளா உடும்பன்சோலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என வலியுறுத்தி இருமாநில விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
டிற்கு வனத்துறை முட்டுக் கட்டையால் 43 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் உள்ளது. இத் திட்டம் நிறைவேற்றப்படுமா என தமிழக, கேரள விவசாயிகள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ரோடுகள் உள்ளது, இதுபோல தேவாரம் சாக்கலூத்துமெட்டு ரோடு திட்டமும் உள்ளது. கேரளா நெடுங்கண்டத்திற்கு தேவாரத்தில் இருந்து 50 கி.மீ. சுற்றி செல்ல வேண்டும். உடும்பஞ்சோலை செல்வதற்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் ஆகும். ஆனால் தேவாரம் மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக 22 கி.மீ., தூரம் உள்ள நெடுங்கண்டத்திற்கு அரை மணி நேரத்திலும், உடும்பஞ்சோலைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.
இதன் மூலம் 38 கி.மீ., தூரமும், ஒன்றரை மணி நேரமும் குறைகிறது. கேரளா நெடுங்கண்டத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு வரை ரோடு வசதி உள்ளது. ஆனால் தமிழக பகுதியான டி.மேட்டுப்பட்டி அடிவாரத்தில் இருந்து 4 கி.மீ., தூரம் உள்ள சாக்கலுாத்துமெட்டு செல்ல ரோடுக்கான பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை.
தேவாரத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு ரோடு அமைக்க அடிக்கல் நாட்டி 43 ஆண்டுகளாகியும் திட்டம் செயல் படுத்தாமல் கிடப்பில் உள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்றி கோரி தேவாரம் சுற்று பகுதி விவசாயிகள், வர்த்தகர்கள் தொடர் போராட்டம் நடத்தியும் பயன் இல்லை.
வனத்துறையால் முடங்கிய திட்டம்
சாக்கலூத்துமெட்டு ரோடு திட்டம் நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தியதால் நெடுஞ்சாலைத்துறை 7 ஆண்டுகளுக்கு முன்பு திட்ட அறிக்கை தயாரித்து நில அளவை மேற்கொள்ள முயன்றது. அப்போது யானைகள் வழித்தடம், வன உயிரினங்கள் பாதிக்கும் எனக் கூறி வனத்துறை நில அளவை செய்ய அனுமதி மறுத்தது. இதனால் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி கிடப்பில் போட்டது.
தமிழக, கேரளா மக்கள் வலியுறுத்தல்
சாக்கலூத்துமெட்டு ரோடு சம்பந்தமாக தமிழக, கேரளா உள்ளாட்சி பிரதிநிதிகள், வர்த்தகர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், சாக்கலூத்துமெட்டு கேரளா, தேவாரம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் கேரளா உடும்பஞ்சோலையில் நடந்தது.
ரோடு அமைப்பதன் மூலம் இரு மாநிலத்திற்கு இடையே போக்குவரத்து, விவசாயம், பொருளாதார வளர்ச்சி மேம்படும். ஐயப்பன் கோயில், பழநி முருகன் கோயில் செல்லவும், போடியில் இருந்து ரயில் போக்குவரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர்.
இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக, கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

