/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகப்பகுதி நீர் திறப்பு குறைப்பு மின் உற்பத்தி குறைந்தது

ADDED : நவ 17, 2025 01:42 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் 400 கன அடியாக குறைக்கப் பட்டதால் லோயர்கேம்ப் பெரியாறு மின்நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1711 கன அடி நீர் திறக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 6:00 மணியில் இருந்து வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 855 கன அடியாக இருந்தது.
நீர் இருப்பு 5633 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. நீர்மட்டம் 134 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணையில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். சில நாட்களாக 154 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
நீர் திறப்பு குறைக்கப் பட்டதால் ஒரு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி 36 மெகா வாட்டாக குறைந்தது.