UPDATED : நவ 10, 2026 08:17 PM
ADDED : நவ 10, 2026 08:13 PM
தேனி: மாவட்டத்தில் சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகள் மானிய திட்டத்தில் 10 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை யினர் தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: வறட்சியை தாங்கி வளர கூடிய சிறுதானியங்களுக்கு குறைந்த அளவு நீர் தேவைப்படும், அதிக ஊட்டச்சத்து, நார்சத்து உடைய சிறு தானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனி வரகு உள்ளிட்டவை சுமார் 61 ஆயிரத்து 750 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட உள்ளன. இத்திட்டம் தமிழநாடு சிறுதானிய இயக்கம் என்ற பெயரில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த பயிர்கள் தலா 10 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
