ADDED : ஏப் 15, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் டீ கடையில் வேலை செய்து வந்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு எதிரில் உள்ள டீ கடையில் இதே ஊரை சேர்ந்த ராஜா, சுப்ரமணியன் என இருவர் வேலை செய்கின்றனர்.
இதில் ராஜாவை, கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
இதற்கு சுப்ரமணியன் தான் காரணம் என நினைத்த ராஜா, நேற்று காலை சுப்ரமணியனை கத்தியால் முகம், கழுத்து, கை உள்ளிட்ட உடம்பின் பல பகுதிகளில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயமடைந்த சுப்ரமணியனை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உத்தமபாளையம் போலீசார் தப்பி ஓடிய ராஜாவை தேடி வருகின்றனர்.