/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு தயார்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

ADDED : ஆக 24, 2025 03:52 AM
தேனி: தேனியில் பள்ளி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பதை ஊக்குவிப்பது பற்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சிக்கு சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்ட மாவட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி பற்றி கல்வித்துறையினர் கூறுகையில், 'பள்ளிக்கல்வித்துறை, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக மாணவர்களை தயார்படுத்துவது, அவர்களுக்கு ஆலோனை வழங்குவது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.ஒருலட்சம், 2ம் பரிசாக ரூ.50ஆயிரம், 3ம் பரிசாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட உள்ளது,' என்றனர்.
பயிற்சி வகுப்பை மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர். போடி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார் பகுதி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் நடக்கிறது.