/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பருவமழை காலங்களில் மின் சீரமைப்பு பணிக்கு குழுக்கள் தயார்
/
பருவமழை காலங்களில் மின் சீரமைப்பு பணிக்கு குழுக்கள் தயார்
பருவமழை காலங்களில் மின் சீரமைப்பு பணிக்கு குழுக்கள் தயார்
பருவமழை காலங்களில் மின் சீரமைப்பு பணிக்கு குழுக்கள் தயார்
ADDED : மே 28, 2025 07:23 AM
தேனி : மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையால் நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் சீரமைப்பு பணிக்கு 300 பேர் அடங்கிய 10 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.'' என, தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடையும் போது எதிர்பாராத மின்தடை, மரங்கள் மின்பாதையில் விழுவது மின் கம்பி அறுந்து விழுவது, மின்கம்பம் சேதம் அடைந்தால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் உடனே சீரமைப்பதற்கு 300 பேர் கொண்ட 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறப்பு கண்காணிப்பு அலுவலராக செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமாரை 94433 84886 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். பொது மக்கள் மின் தடை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது உடனடியாக குழுத் தலைவர்களை தொடர்பு கொள்ளலாம்.
தேனி சப்டிவிஷன் நுகர்வோர்கள் செயற்பொறியாளர் முருகேஷ்பதியை 94458 53171, பெரியகுளம் சப்டிவிஷன் நுகர்வோர்கள் செயற்பொறியாளர் பாலபூமியை 94458 53177, சின்னமனுார் செயற்பொறியாளர் சந்திரமோகனை 94458 53222 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.