
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஜமீன்தாரணி காமலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வித்தக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வித்தக விநாயகர் கோயில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, 2 நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக குண்டல ஹோமம் நடைபெற்றது.
நேற்று கும்பாபிஷேகம் பள்ளி தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரின் ஆசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.