/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கம்பத்தில் ஏற்படுத்த கோரிக்கை
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கம்பத்தில் ஏற்படுத்த கோரிக்கை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கம்பத்தில் ஏற்படுத்த கோரிக்கை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் கம்பத்தில் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : செப் 30, 2011 01:30 AM
கம்பம் : கம்பத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு மையம் ஏற்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கம்பத்தில் உள்ள பள்ளிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடலூரில் உள்ள என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். 10 கி.மீ., தூரம் பஸ்சில் சென்று எழுத வேண்டிய நிலை உள்ளது. கம்பத்தில் பெரிய பள்ளிகள் இருக்கும் போது, தேர்வு மையத்தை கூடலூரில் அமைத்தது ஏன் என்பது தெரியவில்லை. உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் ஆகிய அனைத்து ஊர்களிலும் பொது தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் இங்கு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.