/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டு குடிநீர் திட்டத்தில் தனி குழாய் அமைப்பு
/
கூட்டு குடிநீர் திட்டத்தில் தனி குழாய் அமைப்பு
ADDED : ஜூலை 25, 2011 10:28 PM
ஆண்டிபட்டி : ஏத்தக்கோயில், அனுப்பபட்டி, ரங்கராம்பட்டி, சித்தயகவுண்டன்பட்டி பகுதிகளுக்கு பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தில் தனிகுழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூரில் இருந்து பம்ப் செய்யப்படும் நீர் மீண்டும் குப்பாம்பட்டி அருகே பம்ப் செய்யப்படுகிறது. பின் அங்கிருந்து மணியகாரன்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, ரங்கராம்பட்டி, சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இணைப்பின் ஆரம்ப பகுதியில் உள்ள கிராமங்களில் அதிக அளவு குடிநீர் கிடைக்கிறது. இதனால் கடைசி கிராமங்களுக்கு நீர் குறைவாக கிடைக்கிறது. இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. பி.டி.ஓ.,கலைச்செல்வராஜன் கூறுகையில், 'கூட்டு குடிநீர் திட்டத்தில் தனி குழாய் அமைக்க முடியுமா என்பது குறித்து குடிநீர் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். தனியாக கேட்வால்வு அமைத்து தண்ணீரை பாதிப்படையும் கிராமங்களுக்கு மட்டும் கிடைக்குமாறு செய்யலாம்' என்றார்.