/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18 ம் கால்வாய் நீரால் 5 கண்மாய்களில் கூட நீர் நிரம்பவில்லை; கரை உடைவதும், சீரமைப்பதிலே காலம் வீணாகியது

ADDED : மார் 06, 2024 04:39 AM
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் துவங்கி கூடலுார், கம்பம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், போடி வரை செல்லும் 47 கி.மீ., தூர 18ம் கால்வாய் திட்டத்தால் 6200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இது தவிர 55 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்தும் தாமதமாக டிச.19ல் தண்ணீர் திறக்கப்பட்டது. திறந்த 10 நாட்களில் தலைமதகுப் பகுதி அருகே கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைத்து ஜன.8ல் மீண்டும் திறக்கப்பட்டது. கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் திறப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பிப்.10ல் தொட்டிப் பாலம் அருகே கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக தண்ணீர் நிறுத்தி சீரமைப்பு பணிகள் நடந்தது. அதன் பின் பிப்.14ல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
அடிக்கடி கரை உடைப்பு ஏற்படுவதும், சீரமைத்தபின் தண்ணீர் திறந்து விடுவதுமாக இருந்ததால் 5 கண்மாய்களில் கூட முழுமையாக தண்ணீர் நிரம்பவில்லை. இந்நிலையில் பெரியாறு அணையில் நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் 18ம் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. முறையாக கால்வாய்கள் சீரமைக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த ஆண்டு 18ம் கால்வாய் விவசாயிகளுக்கு பயனில்லாமல் போனதாக புலம்பியுள்ளனர். அடுத்த முறை தண்ணீர் திறப்பதற்கு முன்பு கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.