/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதாள சாக்கடை குழாய் பதித்தும் வீடுகளுக்கு இணைப்பு வழங்காத அவலம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அம்பேத்கர் காலனியில் அவதி
/
பாதாள சாக்கடை குழாய் பதித்தும் வீடுகளுக்கு இணைப்பு வழங்காத அவலம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அம்பேத்கர் காலனியில் அவதி
பாதாள சாக்கடை குழாய் பதித்தும் வீடுகளுக்கு இணைப்பு வழங்காத அவலம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அம்பேத்கர் காலனியில் அவதி
பாதாள சாக்கடை குழாய் பதித்தும் வீடுகளுக்கு இணைப்பு வழங்காத அவலம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அம்பேத்கர் காலனியில் அவதி
ADDED : மே 27, 2025 01:30 AM

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியில் ரோடு, தெருவிளக்கு, சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில் அம்பேத்கர் காலனி, முதல் தெரு, இரண்டாவது தெரு, கழுகுமலை ஓடை தெருக்கள் உள்ளன.
இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அம்பேத்கர் காலனி ஐந்து, ஆறாவது தெருவில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்கு முன்தேங்கி சுகாதாரகேடு நிலவுகிறது. தெருக்களில் ஒருபுறம் சாக்கடை வசதி இல்லாத நிலையில் ரோட்டை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இதனால் ரோடு குறுகலாகி அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
தெருக்களில் குப்பை அகற்றாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரகேடு நிலவுகிறது. அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பேரூராட்சி நடவடிக்கை இல்லை. இப் பகுதி மக்கள் கூறியதாவது:
ஷாக் அடிக்கும் மின் கம்பி
பூங்கொடி, அம்பேத்கர் காலனி: இக் காலனி 5வது தெருவில் ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாவதால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன.
பாதாள சாக்கடை குழாய் பதித்து இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இணைப்பு வழங்கவில்லை. வடிகால் வசதி இன்றி மழை நீர் தெருவில் தேங்குவதால் மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர்.
தெருவில் மின்கம்பத்திற்கு பதிலாக இரும்பு கம்பியை கம்பங்களாக அமைத்து உள்ளனர். பல ஆண்டுகளாக இக் கம்பம் மாற்றி அமைக்கப் படாமல் உள்ளன.
மழைக் காலங்களில் கம்பியில் மின்கசிவு தொட்டால் ஷாக் அடிக்கும் அபாயத்தால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி தெருக்கள் இருளில் மூழ்கி விடுகிறது. கலங்கலான குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் நீரை காய்ச்சி பருகும் நிலை உள்ளது.
சாக்கடை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகம் உள்ளது. தெருவில் ரோடு, சாக்கடை, மின்கம்பம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
ஓடை துார்வாரததால் கழிவுகள் தேக்கம்
கண்ணன், அம்பேத்கர் காலனி: தெருக்களில் பல இடங்களில் சாக்கடை சேதம் அடைந்து உள்ளது.
இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடந்து செல்ல முடியாமல் வீடுகளுக்கு முன் தேங்கி உள்ளது.
ஆக்கிரமிப்பால் பல தெருக்கள் குறுகலாக உள்ளதால் இறந்தவர்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது.
தெருவின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை சிலாப்புகள் உயரமாக உள்ளதால் வாகனங்கள் இதில் மோதி விபத்து ஏற்படுகிறது.
வீடுகளுக்கு அருகே செல்லும் கழுகுமலை ஓடை தூர்வாராததால் மழைநீர் சீராக செல்லாத வகையில் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளாக தேங்கி உள்ளன.
துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடு ஏற்படுவதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
சேதம் அடைந்த சாக்கடை, உயரமாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை சிலாப்புகளை சீரமைத்து ரோடு போடவும், மழைநீர் சீராக செல்லும் வகையில் கழுகுமலை ஓடையை தூர்வாரிட மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.