/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடிக்காய் புளி சீசன் துவக்கம் கிலோ ரூ.350க்கு விற்பனை
/
கொடிக்காய் புளி சீசன் துவக்கம் கிலோ ரூ.350க்கு விற்பனை
கொடிக்காய் புளி சீசன் துவக்கம் கிலோ ரூ.350க்கு விற்பனை
கொடிக்காய் புளி சீசன் துவக்கம் கிலோ ரூ.350க்கு விற்பனை
ADDED : மார் 19, 2025 04:51 AM

போடி : மருத்துவ குணம் வாய்ந்த கொடிக்காய் புளி சீசன் துவங்கி உள்ளதால் கிலோ ரூ. 350 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடிக்காய்ப்புளி மரத்திலே பழுத்து காய்த்திருக்கும். மழை, காற்று அடித்தாலும் கீழே விழாமல் தொங்கிக் கொண்டிருக்கும். இதனால் இந்த மரத்தை 'உதிரா மரம்' என அழைக்கப்படும். பிப்., மார்ச். ஏப்., மாதம் கொடிக்காய் புளிக்கு சீசனாகும். இதன் மரம், பூக்கள், காய்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளவையாகும்.
கொடிக்காய்ப்புளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும், பெண்களுக்கான மாதவிடாய் சிக்கல், நீர் கடுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்ததாகும்.
மொத்த வியாபாரிகளிடம் சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ.250 முதல் ரூ.300க்கு வாங்குகின்றனர். சில்லறையில் கிலோ ரூ.350 முதல் ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர்.
கொடிக்காய்ப்புளி துவர்ப்பு, இனிப்பு கலந்து இருக்கும். சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.