/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காய் பறிப்பு சீசன் முடிகிறது கிலோ ரூ.250 வரை விலை குறைவு
/
ஏலக்காய் பறிப்பு சீசன் முடிகிறது கிலோ ரூ.250 வரை விலை குறைவு
ஏலக்காய் பறிப்பு சீசன் முடிகிறது கிலோ ரூ.250 வரை விலை குறைவு
ஏலக்காய் பறிப்பு சீசன் முடிகிறது கிலோ ரூ.250 வரை விலை குறைவு
ADDED : பிப் 09, 2024 07:11 AM
கம்பம்: ஏலக்காய் பறிப்பு சீசன் முடியும் நிலையில் கிலோவிற்கு ரூ.250 வரை விலை குறைந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது.
ஏலக்காய் சாகுபடியில் காய் பறிப்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் துவங்கும். ஒரு முறை பறித்த பின் 60 நாட்கள் கழித்து மீண்டும் காய் பறிக்கலாம்.
அதாவது ஆண்டிற்கு 5 அல்லது 6 முறை காய் பறிப்பு விவசாயிகளால் மேற்கொள்ளப்படும். தற்போது
இந்த சீசனுக்குரிய காய் பறிப்பு முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. அடுத்த சீசன் வரும் ஆகஸ்ட்டில் துவங்கும்.
இந்நிலையில் தற்போது இரண்டு பறிப்புகளுக்கு இடையே உள்ள கால அளவு 60 நாட்களிலிருந்து 80 நாட்களாக உயர்த்து விட்டது. காரணம் கடந்த ஆனி, ஆடி மாதங்களில் மழை பெய்யாததே இதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.
வரும் சீசனுக்கு முன்பாக மழை கிடைத்தால் தான் ஆகஸ்ட்டில் காய் பறிக்க முடியும் என்றும், இல்லையென்றால் காய் பறிப்பு தள்ளிப் போகும் என்கின்றனர்.
விலையை பொறுத்தவரை நேற்று சராசரி விலை கிலோவிற்கு ரூ. 1447 வரை கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கிலோவிற்கு ரூ.250 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு விவசாயிகளை பாதிக்கும்என்கின்றனர்.

