/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு, பாலம் அமைக்க பூமி பூஜை செய்து 2 ஆண்டுகளாக பணி துவங்காத அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி
/
ரோடு, பாலம் அமைக்க பூமி பூஜை செய்து 2 ஆண்டுகளாக பணி துவங்காத அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி
ரோடு, பாலம் அமைக்க பூமி பூஜை செய்து 2 ஆண்டுகளாக பணி துவங்காத அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி
ரோடு, பாலம் அமைக்க பூமி பூஜை செய்து 2 ஆண்டுகளாக பணி துவங்காத அவலம் சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி
ADDED : டிச 17, 2024 04:33 AM

கம்பம்: சுருளிப்பட்டி -நாராயணத்தேவன்பட்டி இடையே ரோடு, பாலம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க பூமி பூஜை செய்து 2 ஆண்டுகளாகியும் பணி துவங்காததால் இரு கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருவெங்கும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் அவல நிலை தொடர்கிறது.
கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி 11வார்டுகளை கொண்டது. இவ் ஊராட்சி நிர்வாக பிரச்னையில் பல ஆண்டுகளாக சிக்கி தவிக்கிறது. தற்போது தலைவர் பதவியில் இல்லை.
ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. ஊராட்சியில் பெரும்பாலான வீதிகளில் திட்ட பணிகள் அரைகுறையாக உள்ளது. சாக்கடை கட்டியும் மண் வீதியாக உள்ளது. இதனால் மழை காலங்களில் தெருக்களில் நடக்க முடியாத நிலை உள்ளது.
எம்.ஜி.ஆர். நகரில் பாலம் அமைத்தனர். பாலத்திற்கு இணைப்பு ரோடு அமைக்காததால் தெரு 2 அடி பள்ளத்தில் உள்ளது.
இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. 2 ஆண்டுகளாக இப் பகுதி மக்கள் ரோடு வசதி கோரி போராடி வருகின்றனர்.
ஊராட்சி வடக்கு பகுதி தெருக்கள் சீரமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் சேதமடைந்துள்ளன. பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் போதியளவு இல்லை.
ஆற்றுக்கு செல்லும் தெரு, யானை கெஜம் வீதியில் பராமரிப்பு செய்த கழிப்பிடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் குப்பை கிடங்காகவும், கட்டட கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் தெரு, ஊராட்சி பள்ளி பகுதி, ஆற்றுக்கு செல்லும் தெரு என வீதிக்கு வீதி குப்பை குவிந்துள்ளன. இதன் அருகில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மெயின்ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தியும் ஊராட்சிக்கு நல்ல வருவாயை ஈட்டி தந்த சமுதாய கூடம் பராமரிப்பு செய்யாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி விரிவாக்க பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவில் செல்கிறது. கிராமத்திற்கு கிழக்கு பகுதி காலனிக்கு குடிநீர், சாக்கடை வசதி செய்து தரவில்லை.
இதனால் வீட்டின் முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. இங்குள்ள சமுதாய கூடத்தின் மேற் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் பழுதடைந்தும் உள்ளன.
ஆக்கிரமிப்பில் தெருக்கள்
முகுந்தன், திராட்சை விவசாயி, சுருளிப்பட்டி: நாராயணத்தேவன்பட்டி- சுருளிப்பட்டி இடையே இணைப்பு சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கியது.
2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் ரூ.37 லட்சம் செலவில் பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
ஆனால் இதுவரை அதற்கான பணி துவக்கப்படவில்லை. இணைப்பு சாலை அமைந்தால் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, சுருளி அருவி வரை பைபாஸ் ரோடு போல் பயன்படும். எனவே இணைப்பு சாலை அமைக்க வேண்டும். சாக்கடை அமைக்க தோண்டும் போது பாரபட்சம் காட்டப்படுகிறது.
தெருக்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை. ஊராட்சி பதவிகாலம் முடிவிற்கு வருகிறது.
அதிகாரிகளாவது கவனம் செலுத்தி பொதுச் சுகாதாரம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்
ராமர், சுருளிப்பட்டி: ஆற்று நீரை பம்ப் செய்து அப்படியே வழங்காமல் சுத்திகரித்து வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர். நகரில் சிறுபாலம் உயர அமைத்து தெருவை பள்ளமாக்கி விட்டனர். தெருக்கள் மண் ரோடாக உள்ளதால் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது.
தெரு எங்கும் குப்பை குவிந்துள்ளது. பெண்கள் சுகாதார வளாகம் சீரமைத்து அதனை பூட்டி வைத்துள்ளதால் குப்பை கொட்டும் அவலம் தொடர்கிறது.
தெருவெங்கும் சுகாதாரம் மோசமாக உள்ளது. துாய்மை பணியை துரிதப்படுத்த வேண்டும்.