/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சமரச தீர்வு பரிந்துரை மனுக்களுக்கு வழக்கறிஞர்கள் வசதி மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு

ADDED : ஜன 05, 2024 05:15 AM
தேனி : மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தீர்வு காண முடியாத மனுக்களுக்கு மாவட்ட போலீஸ் சார்பில் இலவச வழக்கறிஞர் நியமன வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்' என ஆலோசனை கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தெரிவித்தார்.
தேனி எஸ்.பி., அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன் முன்னிலை வகித்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி, அனைத்து டி.எஸ்.பி.,க்கள், ஸ்டேஷன் எழுத்தர்கள் பங்கேற்றனர்.
நிதி மோசடி, நில மோசடி, தற்கொலைக்கான நிவாரண நிதி உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வு வேண்டி 74 மனுக்கள் வழங்கி இருந்தனர். இதில் 39 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறுகையில், 'மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீர்வு காண முடியாத பிரச்னைகளுக்கு மாவட்ட சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரை செய்கிறோம்.
அங்கு மனுதாரர்களுக்கு இலவச வழக்கறிஞர் வாதிட ஏற்பாடு செய்து, பிரச்னைக்கு தீர்வு காணப்பட உள்ளது. இந்த நடைமுறை எஸ்.பி., வழிகாட்டுதலில் நடத்தப்பட உள்ளது' என்றார்.