/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கடந்தாண்டில் 14,374 மி.மீ., மழைப்பதிவு 2023ம் ஆண்டை விட 343.5 மி.மீ., அதிகம்

ADDED : ஜன 16, 2025 05:32 AM
தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டு 14,374.2 மி.மீ., மழை பதிவானது. மழை காரணமாக 177 வீடுகள் சேதமடைந்தன.தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தென்மேற்கு,வடகிழக்கு பருவமழை காலங்களில் நல்ல மழை பெய்யும் மாவட்டங்களில் தேனியும் ஒன்றாகும்.
மாவட்டத்தில் 13 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மழை மானி மூலம் மழை அளவு கணக்கிடப்படுகிறது.
கடந்தாண்டு ஆண்டிபட்டியில் 1074.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 714.6 மி.மீ., போடியில் 825 மி.மீ., கூடலுாரில் 516 மி.மீ., மஞ்சளாறு அணையில் 1057.2 மி.மீ., பெரியகுளத்தில் 1621.5 மி.மீ., பெரியாறு அணையில் 2369 மி.மீ., சோத்துப்பாறை அணையில் 1553.4 மி.மீ., தேக்கடியில் 1687.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 550 மி.மீ., வைகை அணையில் 889.4 மி.மீ., வீரபாண்டியில் 759.3 மி.மீ., சண்முகநதி அணையில் 756.2 மி.மீ., என மொத்தம் 14,374.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில் பிப்., மார்ச்சில் மழை மிக குறைந்தளவு பதிவானது. இந்த அளவு 2023யை விட 343.5 மி.மீ., அதிகம் என்றாலும், 2022 யைவிட 1211 மி.மீ.,குறைவாகும். மழை காரணமாக குடிசை வீடுகள் 160 பகுதியும்,11 முழுவதும் சேதமடைந்தன. அதே போல் கான்கிரீட் வீடுகள் 6 பகுதி சேதடைந்தன.
இவ்வீடுகளுக்கு ரூ. 7.65லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி, வீடு இடிந்து 5 பேர் பலியாகினர்.
இவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4லட்சம் வீதம் ரூ.20 லட்சம், பலியான 4 கால்நடைகளுக்கு ரூ.97,500 பேரிடர் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.