/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசை கண்டித்து மாவட்டங்களில் மே 9ல் பிச்சை எடுக்கும் போராட்டம்
/
அரசை கண்டித்து மாவட்டங்களில் மே 9ல் பிச்சை எடுக்கும் போராட்டம்
அரசை கண்டித்து மாவட்டங்களில் மே 9ல் பிச்சை எடுக்கும் போராட்டம்
அரசை கண்டித்து மாவட்டங்களில் மே 9ல் பிச்சை எடுக்கும் போராட்டம்
ADDED : மே 06, 2025 06:44 AM
தேனி: ''தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து மே 9ல் மாவட்ட தலை நகரங்களில் மடிப்பிச்சை எடுத்து போரட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.'' என, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
தேனியில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியாக சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என கூறினர்.
ஆனால் இதுவரை செய்யவில்லை. சத்துணவுத் திட்டத்தில் பொறுப்பாளர் சமையலர் பணியிடங்களை நிரப்புவதை கைவிட்டுள்ளனர். உதவியாளர் பணியிடத்தை மட்டும் மதிப்பூதியத்தில் நியமிக்க உத்தரவிட்டு உள்ளனர்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்குகின்றனர். பல ஆண்டுகளாக ரூ.6750 வழங்க கோரிக்கை விடுக்கிறோம். அதே போல் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ஈமச்சடங்கு நிதி வழங்குவதாக கூறி, நிறைவேற்றவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மே.9ல் மாவட்ட தலைநகரங்களில் மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.