/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் வனத்துறை மும்முரம்
/
போடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் வனத்துறை மும்முரம்
போடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் வனத்துறை மும்முரம்
போடியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் வனத்துறை மும்முரம்
ADDED : மார் 06, 2024 05:41 AM
போடி : போடி வனப்பகுதியில் காட்டு தீ பரவுவதை தடுக்க தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போடி பகுதியில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப் பகுதியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கஞ்சா பயிரிடப்படுவோர் , கரிமூட்டம் போடுபவர்கள், கால்நடை மேய்ப்போர் இங்குள்ள மரங்களுக்கு தீ வைத்து வருகின்றனர்.
டூவீலர்,வாகனங்களில் செல்பவர்கள் சிகரெட், பீடிகளை குடித்து விட்டு அணைக்காமல் வீசி செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் காட்டு தீயால் பல ஏக்கர் விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின்றன.
ஐந்து நாட்களுக்கு முன்பு கழுகுமலை பீட் மங்களகோம்பை, 2 நாட்களுக்கு முன்பு வடக்குமலை அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் தீ வைப்பு சம்பவத்தால் பரவிய காட்டுத் தீயால் பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதமாயின.
வன உயிரினங்கள் பலியாவதோடு, வனவிலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டது. தீ பரவுவதை தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 'வனப்பகுதியில் பற்ற வைக்கும் நெருப்பானது, நமது வருங்கால சந்ததியினருக்கு நாமே வைக்கும் நெருப்பாகும்' என்ற வாசகங்கள், வனப்பகுதி வழியாக செல்லும் போது எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை விட்டு செல்ல கூடாது,
வனப்பகுதியில் தீ அல்லது புகையோ தெரிந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் போடி - மூணாறு, குரங்கணி செல்லும் பயணிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வனத்துறையினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

