/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நுாலகத்திற்கு ஒதுக்கிய நிதி பொ.ப.துறையால் அரசுக்கு திரும்பியது
/
கம்பம் நுாலகத்திற்கு ஒதுக்கிய நிதி பொ.ப.துறையால் அரசுக்கு திரும்பியது
கம்பம் நுாலகத்திற்கு ஒதுக்கிய நிதி பொ.ப.துறையால் அரசுக்கு திரும்பியது
கம்பம் நுாலகத்திற்கு ஒதுக்கிய நிதி பொ.ப.துறையால் அரசுக்கு திரும்பியது
ADDED : பிப் 05, 2025 07:11 AM
கம்பம்: கம்பம் நுாலகம் சீரமைக்க பொதுப்பணித்துறை மதிப்பீடு தயார் செய்து வழங்காததால் ஒதுக்கீடு செய்த நிதி அரசுக்கு திரும்ப சென்றது.
தேனி மாவட்டத்தில் சொந்த கட்டடங்களில் செயல்படும் பெரும்பாலான நூலக கட்டங்கள் மோசமான நிலையில் உள்ளது. இவற்றில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நூலகங்கள் ஒரளவிற்கு பரவாயில்லை. மோசமான நுாலக பட்டியலில் கம்பம் முதலிடத்தில் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடியும், மேற்கூரைகள் பெயர்ந்து விழும். சீரமைக்க கோரி பல தரப்பினர் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இந்நிலையில் 2024ல் அனைத்து நூலகங்களுக்கும் புதிய கட்டடம் கட்டதலா ரூ.25 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. இடமிருந்தால் புதிய கட்டடம் கட்டி கொள்ளலாம். புதுப்பட்டியில் இடம் இருந்ததால் சிறிய கட்டடம் ஒன்றை கட்டினர்.
கம்பம் நூலகத்திற்கு இடமில்லை. இருந்த போதும் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. மதிப்பீடு தயார் செய்து பொதுப்பணித் துறை கட்டட பிரிவிற்கு நூலக துறை கடிதம் கொடுத்தது .
ஆனால் ஆறு மாதங்கள் வரை பொதுப்பணித்துறை மதிப்பீடுகள் தயார் செய்து வழங்காததால் நிதி ஒதுக்கீட்டை அரசு திரும்ப பெற்றது. பொதுப் பணித் துறையின் தாமதத்தால், கிடைத்த நிதியையும் பயன்படுத்த முடியாமல் போனது என நூலகத் துறை புலம்புகிறது. இதனால் சேதமடைந்த கட்டடத்தில் வாசகர்களும் அச்சத்துடன் அமர்ந்து படித்து வருகின்றனர்.