/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் கவர்னர் செல்லும் வழி மாற்றம்
/
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் கவர்னர் செல்லும் வழி மாற்றம்
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் கவர்னர் செல்லும் வழி மாற்றம்
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் கவர்னர் செல்லும் வழி மாற்றம்
ADDED : பிப் 09, 2024 07:14 AM
தேனி: நேற்று தேனி மாவட்டத்தில் கவர்னர் ஆர்.என்.,ரவி தேனி வருகை தந்தார். தமிழக அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் கவர்னரை கண்டித்து தேனி பங்களாமேடு, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த இண்டியா கூட்டணி கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று காலை தேனி பழைய பஸ் ஸடாண்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் சன்னாசி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் பெருமாள், ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தி.க., மாவட்டச் செயலாளர் மணிகண்டன், அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, இந்திய யூனியன் முஸ்லீம் மாவட்டத் தலைவர் சாகுல்ஹமீது, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அப்துல்லா பத்திரி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர் தவ்ஜித் சபியுல்லா, உட்பட 180 பேர் பங்கேற்றனர்.
இன்ஸபெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் மேரிமாதா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையால் நிகழ்வில் பங்கேற்ற கவர்னர் ரவி, அன்னஞ்சி வழியாக குமுளி பைபாஸ் ரோட்டை அடைந்து, பின் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு சென்றார்.
அதிக வேகத்தடைகளால் நிகழ்ச்சி ரத்து
தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார்.
காமாட்சிபுரத்தில் இருந்து ராயப்பன்பட்டி செல்லும் ரோட்டில் 37 இடங்களில் வேகத்தடைகள், குண்டும், குழியுமான ரோடு போக்குவரத்திற்கு லாயக்கற்று இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளின் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி கவர்னர் திராட்சை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியை ரத்து செய்து தேனிக்கு திரும்பினார்.

