UPDATED : நவ 18, 2026 11:16 PM
ADDED : நவ 18, 2026 06:32 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
அமைப்பு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டம் 2025ஐ திரும்ப பெற வேண்டும். மாதாந்திர மருத்துவ படியை ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிர்வாகிகள் மணி, ராகவன், தனுஷ்கோடி, ஈஸ்வரன், ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
