/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு புகைக்காதவர்களுக்கும் புற்றுநோய் பாதிக்கும் அவலம்

ADDED : அக் 26, 2025 04:55 AM
தேனி: மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார், அதிகாரிகள் தவிக்கின்றனர். பொது இடங்களில் பலரும் புகைப்பிடிப்பதால் புகைக்காதவர்களுக்கும் புற்று நோய் பாதிக்கும் அவலம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை உள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்டுகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாகவும், பயன்பாடு அமோகமாகவும் உள்ளது.
ஆனால் இதனை தடுக்க வேண்டிய உள்ளாட்சி சுகாதார அமைப்பும், உணவு பாதுகாப்புத்துறை போலீசார் பெயரளவில் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர்.
உதாரணமாக போலீசார் கடைகளில் 4 புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தால் வழக்கு பதிகின்றனர்.
ஆனால், மொத்தமாக விற்பனை செய்வது யார், இவை எப்படி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது என ஆய்வு செய்வதில்லை.
பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடைகள், பெட்டிக்கடைகளில் 'புகை பிடிக்க தடை' என விழிப்புணர்வு பதாகை இருந்தாலும் அந்த பகுதி புகை மண்டலங்களாக உள்ளன. இதனால் டீக்கடைகளில் புகைபிடிக்காமல் டீ குடிக்க வருபவர்கள் பலரும் புற்று நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
உள்ளாட்சி அமைப்பு சுகாதார அலுவலர்கள், உணவுப்பாதுகாப்புத்துறையினர், போலீசார் விற்பனை செய்யபவர்களை மட்டுமின்றி, மொத்தமாக புகையிலைப் பொருட்கள் மாவட்டத்திற்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.