/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; தடுக்க இயலாமல் ஊராட்சி திணறல்
/
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; தடுக்க இயலாமல் ஊராட்சி திணறல்
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; தடுக்க இயலாமல் ஊராட்சி திணறல்
ஆற்றில் கொட்டப்படும் குப்பை; தடுக்க இயலாமல் ஊராட்சி திணறல்
ADDED : பிப் 07, 2024 12:45 AM

மூணாறு : மூணாறில் குப்பைகளை கையாள ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் அவை முதிரைபுழை ஆற்றில் கொட்டுவதால் மாசு ஏற்பட்டுள்ளது.
மூணாறில் குப்பை உள்பட கழிவுகள் கட்டணம் அடிப்படையில் கடைகள், ஓட்டல்கள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் இருந்து தரம் பிரித்து ஊராட்சி சார்பில் சேகரிக்கப்படுகிறது.
ஆறு உள்பட பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவிர குப்பை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக பசுமை படைகள் பணியமர்த்தப்பட்டு நகர் முழுவதும் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் முதிரைபுழை ஆறு உள்பட பல பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
தற்போது ஆற்றில் நீர்வரத்து குறைவு என்பதால் குப்பைகளை அடித்துச் செல்ல வழியின்றி அவை குவிந்து மாசு ஏற்பட்டுள்ளது.
குப்பைகளை கையாள ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தியும் அவை பொது இடங்கள், ஆற்றில் கொட்டுவதை தடுக்க இயலவில்லை.

