/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் எதிர்ப்புகள் கிளம்பியதால் சிக்கல்
/
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் எதிர்ப்புகள் கிளம்பியதால் சிக்கல்
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் எதிர்ப்புகள் கிளம்பியதால் சிக்கல்
ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் எதிர்ப்புகள் கிளம்பியதால் சிக்கல்
ADDED : ஜன 06, 2024 06:41 AM
மூணாறு: மூணாறு நகரில் புறவழிசாலை மற்றும் பெரியவாரை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது.
மூணாறு நகரில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலையிலும், மூணாறு உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் பாலம் அருகிலும் ரோட்டோரங்கள் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. அவற்றை அகற்றுமாறு இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் உத்தரவிட்டார்.
அதனால் இரு பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்றுமாறு மூணாறு ஊராட்சி செயலர் சகஜன் நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்தார். அல்லாத பட்சத்தில் போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்தனர்.
எதிர்ப்பு: மூணாறு நகரில் ஆக்கிரமிப்புகள் பெரும் அளவில் உள்ளன. அவை பல்வேறு வகைகளில் இடையூறாக உள்ளபோதும் அவற்றை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவற்றை அகற்றி விட்டு பிற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு எதிர்ப்புகள் வலுத்துள்ளதால் ஊராட்சி செயலர் நோட்டீஸ் அளித்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.