/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூ - வீலரை சத்தமாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
/
டூ - வீலரை சத்தமாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
ADDED : நவ 01, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சிறுவன் லைசென்ஸ் எடுக்கும் வயதை எட்டவில்லை. இவர் டூ - வீலரில் இருந்த, 'சைலன்சரை' மாற்றி விட்டு, அலறல் ஒலி எழுப்பும் சைலன்சரை பொருத்தியபடி, தேவதானப்பட்டி வைகை அணை ரோட்டில் தீப்பொறி பறக்க தாறுமாறாக ஓட்டிச் சென்றார்.
அப்பகுதியில் ரோந்து சென்ற தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை, டூ - வீலரை கைப்பற்றினார். ஸ்ரீவசந்த்திற்கு டூ - வீலரை ஓட்ட கொடுத்த உரிமையாளரான அவரது மாமா மணி, 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.