/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டும், குழியுமாக ரோடு மாறியதால் வர மறுக்கும் டவுன் பஸ் பண்ணைத்தோப்பில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
/
குண்டும், குழியுமாக ரோடு மாறியதால் வர மறுக்கும் டவுன் பஸ் பண்ணைத்தோப்பில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
குண்டும், குழியுமாக ரோடு மாறியதால் வர மறுக்கும் டவுன் பஸ் பண்ணைத்தோப்பில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
குண்டும், குழியுமாக ரோடு மாறியதால் வர மறுக்கும் டவுன் பஸ் பண்ணைத்தோப்பில் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
ADDED : பிப் 12, 2025 05:13 AM

-போடி : போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதல் வார்டு பண்ணைத்தோப்பில் ரோடு குண்டும், குழியுமான மாறியதால் தினமும் டவுன் பஸ் வர மறுப்பதால் பயணிக்கும் நடந்து சென்று சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பண்ணைத்தோப்பு கிராமம். குடிநீர் மேல்நிலைத் தொட்டி தெரு, மயான ரோடு சாலிமரத்துப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதியில் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் தேனி செல்வதற்கு முக்கிய பாதையாக பண்ணைத்தோப்பு ரோடு உள்ளது. போடி - தேனி செல்லும் தீர்த்த தொட்டி மெயின் ரோட்டில் இருந்து சாலிமரத்துப்பட்டி வரை ரோடு பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக மாறி மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. சாக்கடை வசதி இருந்தும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கியுள்ளது. தெருக்களில் குப்பை அகற்றததால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்சனை குறித்து மக்கள் கூறியதாவது :
ரோடு சீரமைத்து பஸ் வசதி தேவை
ராஜா, பண்ணைத்தோப்பு :தேனி - போடி செல்லும் தீர்த்ததொட்டி மெயின் ரோட்டில் இருந்து பண்ணைதோப்பு - சாலிமரத்துபட்டி வரை 3 கி.மீ., தூரம் ரோடு அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது. உரிய பராமரிப்பு இல்லாததால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மக்கள் டூவீலரில் கூட செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். தீத்த தொட்டி மெயின் ரோட்டில் இருந்து பண்ணைத்தோப்பு வரை பள்ளி நாட்களில் மாணவர்களுக்காக காலை, மாலையில் மட்டுமே பஸ் வந்து செல்லும். மற்ற நாட்களில் ரோட்டின் மோசமான நிலை கருதி டவுன்பஸ் வராது. பஸ் வசதி இல்லாததால் போடி, தேனி செல்ல 2 கி.மீ., தூரம் நடந்து, டூவீலரில் சென்று பஸ்சில் பயணிக்க வேண்டியுள்ளது. ரோடு மோசம் என்பதால் பிரசவத்திற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட வருவது இல்லை. மயானத்திற்கு செல்ல பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. மழைக் காலங்களில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல சிரமம் அடைகின்றனர். ரோட்டில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றாததால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மயானத்தில் போர்வெல் மின்மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வசதி இல்லை. ரோடு, பஸ், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோடங்கிபட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் சுகாதார வளாகம் அவசியம்
பாலமுருகன், பண்ணைத்தோப்பு:இங்கு ரேஷன் கடை இல்லாததால் வாரத்தில் 2 நாட்கள் வாகனங்களில் வந்து பொருட்களை விநியோகம் செய்கின்றனர். மழைக் காலங்களில் வருவது இல்லை. இந்த நாட்களில் 3 கி.மீ, தூரம் உள்ள கோடங்கிப்பட்டிக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரம்ம ஏற்படுகிறது. பெண்கள் சுகாதார வளாகம் இன்றி சிரமம் அடைகின்றனர். சாலிமரத்துப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் கிழக்கு, மேற்கு கண்மாய் அருகே குப்பை கொட்டி வருகின்றனர். இதை அகற்றாமல் தீ வைத்து விடுகின்றனர்.இதில் வெளியேறும் நச்சு புகையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குடிநீர்தொட்டி ஓராண்டுக்கு மேலாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகம் செய்வதால் மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுகின்றன. சுகாதார வளாகம், ரேஷன்கடை அமைப்பதோடு, குடிநீர் மேல் தொட்டியை சுத்தப்படுத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.