/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது தமிழக பகுதிக்கு நீர் திறப்பு குறைப்பு

ADDED : அக் 14, 2024 04:33 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை குறைவால்நீர்மட்டம் 121 அடியாக குறைந்தது. இதனால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கியது. ஆனால் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு பெய்யவில்லை. அதிக பட்சமாக செப்.13ல் நீர்மட்டம் 132 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைந்து நீர்மட்டமும் சரியத் துவங்கியது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 121 அடியானது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக நீர் திறப்பு 1033 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 340 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
பெரியாறில் 2.4 மி.மீ., தேக்கடியில் 2 மி.மீ., மழை பதிவானது. தேனி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்த போதிலும் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழை குறைவாகவே உள்ளது.
அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.