/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆற்றில் குதித்து பலியான பெண் ஆத்துார் டிரைவரின் மனைவி
/
ஆற்றில் குதித்து பலியான பெண் ஆத்துார் டிரைவரின் மனைவி
ஆற்றில் குதித்து பலியான பெண் ஆத்துார் டிரைவரின் மனைவி
ஆற்றில் குதித்து பலியான பெண் ஆத்துார் டிரைவரின் மனைவி
ADDED : செப் 07, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், செப். 7
மேட்டூர், எம்.ஜி.ஆர்., பாலத்தில் இருந்து, கடந்த, 4 மதியம், 40 வயது மதிக்கத்தக்க பெண் காவிரியாற்றில் குதித்தார். தண்ணீர் அடித்து செல்லப்பட்டு மூச்சுத்திணறி பலியானார். தீயணைப்பு குழுவினர், உடலை மீட்டனர். மேட்டூர் போலீசார் விசாரித்தனர்.
அதில் இறந்தவர், ஆத்துாரை சேர்ந்த, நெல் அறுவடை செய்யும் இயந்திர டிரைவர் விஜயகுமாரின் மனைவி ரேணுகா, 42 என தெரியவந்தது. அவர்களுக்கு திருமணமாகி, 20 ஆண்டாவதும், இரு மகன்கள் உள்ளதும் தெரிந்தது. மேலும் குடும்ப தகராறில் கடந்த, 4ல் வீட்டை விட்டு வெளியேறி, மேட்டூர் வந்த ரேணுகா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.