ADDED : நவ 15, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கொடுவிலார்பட்டி பள்ளபட்டி கட்டடத் தொழிலாளி செந்தில்குமார் 40. இவரது வீட்டருகில் உறவினர் பாண்டியம்மாள் வீடு கட்டினார்.
இதற்காக கட்டுமானப் பொருட்களை ரோட்டில் வைத்திருந்தார். பொருட்களை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்த கூறி, செந்தில்குமார் அசிங்கமாக திட்டினார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. செந்தில்குமார் செங்கல்லால் தாக்கியதில் பாண்டியம்மாள் காயமடைந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.