/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய வாகனம் திருட்டு: எஸ்.ஐ., புகார்
/
போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய வாகனம் திருட்டு: எஸ்.ஐ., புகார்
போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய வாகனம் திருட்டு: எஸ்.ஐ., புகார்
போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திய வாகனம் திருட்டு: எஸ்.ஐ., புகார்
ADDED : செப் 19, 2024 05:33 AM
ஆண்டிபட்டி: கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி சப் டிவிஷன் ஏத்தக்கோயில் அவுட் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் ராஜு, இவர் ஆண்டிபட்டி ஸ்டேஷனில் மாற்று பணியாக இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் வழக்கு தொடர்பான பைல்களை கவனித்து வருகிறார். வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களையும் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி அவைகளை கயிறுகளால் இணைத்து தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனம் ஒன்றை காணவில்லை. இது குறித்து பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய இருசக்கர வாகனம் ஸ்டேஷன் வளாகத்தில் காணாமல் போனது குறித்து சிறப்பு எஸ்.ஐ., ராஜூ புகார் செய்தார். ஆண்டிபட்டி எஸ்.ஐ.,சுமதி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.