sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொழிலதிபரை கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

/

தொழிலதிபரை கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலதிபரை கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலதிபரை கடத்திய 6 பேருக்கு ஆயுள் தண்டனை; தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : ஏப் 29, 2025 07:20 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி தொழிலதிபர் ஆண்ட்ராயர் அதிசயத்தை 68, காரில் கடத்திய ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி தொழிலதிபர் ஆண்ட்ராயர் அதிசயம் 68. இவரை அடையாளம் தெரியாத நபர்கள் காரில் கடத்தி சென்றதாக போலீசில் 2023 மார்ச் 14 மருமகன் டேவிட் ஆனந்தராஜா புகார் அளித்தார். எஸ்.பி., ஆபீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து சோதனை சாவடிகளும் அலர்ட்' செய்யப்பட்டது. ஆண்டிபட்டியில் எஸ்.ஐ., சுல்தான்பாட்ஷா மற்றும் போலீசார் சோதனை செய்ய முயன்ற போது கார் நிற்காமல் சென்றது.

டூவீலரில் விரட்டிய எஸ்.ஐ., கண்டு காரில் இருந்தவர்கள் அதிலிருந்த ஆண்ட்ராயர் அதிசயத்தை கீழே தள்ளிவிட்டு சென்றனர். காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி விட்டு காரை துரத்தினர். கார் டிரைவர் மதுரை ஆஸ்டின்பட்டி நடுத்தெரு பிரபு 33, திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் கவுசிகன் 22, அதேபகுதி கருப்பசாமி ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை திருமங்கலம் பழனியாபுரம் திருப்பதி 42, திருப்பரங்குன்றம் அழகுசுந்தர் 25, தேனி ஆனைமலையான்பட்டி மந்தையம்மன் கோயில் தெரு புவனேஸ்வரன் 30, நாராயணத்தேவன்பட்டி சங்கரலிங்கம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

டிரைவர் பிரபு, கவுசிகன், கருப்பசாமி, திருப்பதி, அழகுசுந்தர் ஆகியோர் ராயப்பன்பட்டி சேவல் சண்டை போட்டிக்கு வரும் போது புவனேஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபு உள்ளிட்ட ஐந்து பேரும், புவனேஸ்வரன், சங்கரலிங்கத்திடமும், நல்ல ஆளாக இருந்தால் கூறுங்கள், கடத்தி பணம் சம்பாதிக்கலாம். உங்களுக்கும் ஒரு பங்கு தருகிறோம்,' என்றனர். அதற்கு ஆசைப்பட்டு தொழிலதிபர் ஆண்ட்ராயர் தோட்டத்தில் பணிபுரியும் சங்கரலிங்கம் தகவல் தர, கடத்தல் சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தது தெரிந்ததும் சங்கரலிங்கம் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பிரபு உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சுகுமாறன் ஆஜரானார். ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை. ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். தொழிலதிபர் ஆண்ட்ராயர் அதிசயம் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர் இறந்து விட்டார்.






      Dinamalar
      Follow us